தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் திலகவதி டிஜிபியாகிறார்

தற்போது பொருளாதாரக் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்து வருகிறார் திலகவதி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக லத்திகா சரண் பணியாற்றி வருகிறார். இவர் தவிர டிஜிபி அந்தஸ்தில்,தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக என்.பாலசந்திரனும், தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனராக ஆர்.நடராஜூம், ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக மத்திய அரசு பணியில் கே.விஜயகுமாரும், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக போலோநாத்தும் பணிபுரிகிறார்கள்.
இவர்களில் போலீஸ் பயிற்சி டிஜிபியாக இருந்து வந்த பாலச்சந்திரன் கடந்த 31ம்தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து டிஜிபி பதவி காலியாகியுள்ளது. இந்த இடத்திற்குத்தான் திலகவதி நியமிக்கப்படவுள்ளார்.
தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை உடையவர் திலகவதி. காவல்துறை அதிகாரியாக மட்டுமல்லாமல் நல்ல எழுத்தாளராகவும் சிறப்பு பெற்றவர் திலகவதி. பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் திகழ்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications