விஜய் மல்லையாவை நீக்கிய சுப்பிரமணிய சாமி!
டெல்லி: ஜனதா கட்சியில் இருந்து கொண்டே மதசார்பற்ற ஜனதா தளம் மூலம் ராஜ்யசபா எம்பி பதவிக்குப் போட்யிடும் விஜய் மல்லையாவை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ஜனதா கட்சித் தலைவரான சுப்பிரமணிய சாமி.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மதுபான- விமான நிறுவன தொழிலதிபரும், ஐ.பி.எல். பெங்களூர் அணியின் உரிமையாளருமான விஜய் மல்லையா ஜனதா கட்சியின் செயல் தலைவராக இருந்து வந்தார்.
இந் நிலையி்ல் இப்போது ராஜ்யசபா தேர்தலில் தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மல்லையாவுக்கு பாஜகவும் மறைமுகமாக உதவுகிறது.
இந் நிலையில் எம்பி பதவிக்காக கட்சி மாறியதால் ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக சுப்பிரமணிய சாமி அறிவி்த்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் மல்லையா கடந்த 2004ம் ஆண்டு ஜனதா கட்சியின் செயல் தலைவராக நியக்கப்பட்டார். ஆனால் அவர் தலைவர் பதவியில் செயல்படவே இல்லை. தூங்கிக் கொண்டிருந்தார். எனவே அவர் ஜனதா கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.
ஜனதா கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது. அதில் விஜய் மல்லையாவை கட்சி தலைவர் பதவி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும்.
கர்நாடக மாநில ஜனதா கட்சியும் கூண்டோடு கலைக்கப்படுகிறது. நடராஜை அமைப்பு செயலாளராக கொண்டு புதிய குழு அமைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா ஜனதா கட்சியின் செயல் தலைவராக இருந்ததே சுப்பிரமணிய சாமியின் இந்த அறிக்கை மூலம் தான் பெரும்பாலான பத்திரிக்கையாளர்களுக்கே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications