ஊருக்குப் போய் சேர்ந்தார் 'தேடப்படும் குற்றவாளி டக்ளஸ்'!

இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் 3 வழக்குகள் உள்ளன. அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் டெல்லிக்கு வந்த அவரை கைது செய்ய உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை நீதிமந்றம் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தது.
இந் நிலையில், டெல்லியில் இருந்து டக்ளஸ் தேவானந்தா கொழும்பு திரும்பிவிட்டார். அதிபர் ராஜபக்சேவுடன் வந்த குழுவினரோடு சிறப்பு விமானத்தில் அவரும் கொழும்பு போய்ச் சேர்ந்தார்.
அவர் தேடப்படும் குற்றவாளி என்றும், இது குறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் கூறியிருந்தார்.
வழக்கமாக குற்றவாளிகள் மற்ற மாநிலத்தில் இருந்தால் அவர்களைப் பிடிக்க தனிப் படையை தேடும் மாநிலம் அனுப்புவது வழக்கம்.
டக்ளஸைப் பிடிக்க எந்தப் படையும் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கும் அவர் மீது கொலை, ஆள் கடத்தல் என மூன்று கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தில் உள்ளே இருந்த டக்ளஸ், தனக்கு இந்திய-இலஙகை ஒப்பந்தம் மூலம் வழக்குகளில் இருந்து விடுதலை கிடைத்துவிட்டதாக அவராகவே கூறிக் கொண்டு ஊருக்குப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications