யூனியன் கார்பைடு தலைவர் ஆன்டர்சனை விடுவிப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை - பிரணாப் முகர்ஜி
யூனியன் கார்பைடு தலைவர் ஆன்டர்சனை விடுவிப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை - பிரணாப் முகர்ஜி
டெல்லி: யூனியன் கார்பைடு முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை விடுவிப்பதைத் தவிர நமக்கு அப்போது வேறு வழி இருக்கவில்லை என்று ஆன்டர்சனை கோட்டை விட்ட விவகாரத்தில் சப்பைக்கட்டு கட்டியுள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
வாரன் ஆன்டர்சனை விடுதலை செய்யுமாறு 1984ம் ஆண்டு மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் உத்தரவிட்டார். போபால் விஷ வாயு வழக்கில் போபால் கோர்ட் பிறப்பித்துள்ள தீர்ப்பால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் அர்ஜூன் சிங்கின் இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜூன் சிங் அரசால் அன்று விடுவிக்கப்பட்ட ஆன்டர்சன் அதன் பிறகு அமெரிக்காவுக்கு ஓடி தப்பி விட்டார். விஷ வாயு வழக்கில் அவர் அதன் பிறகு ஆஜராகவே இல்லை.
மேலும், அப்போதைய ராஜீவ் காந்தி அரசு உத்தரவிட்டதால்தான் ஆன்டர்சனை அர்ஜூன் சிங் விடுவித்தார் என்றும் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. எனவே ஆன்டர்சன் தப்பிப் போக ராஜீவ் காந்திதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பிரணாப் முகர்ஜி அளித்துள்ள பேட்டியில், அந்த சமயத்தில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சமாளிக்க வேண்டிய அர்ஜூன் சிங்குக்கு இருந்தது. மக்கள் பெரும் கொந்தளிப்புடன் இருந்தனர். எனவே அமைதியை நிலை நாட்டுவதற்காக ஆன்டர்சனை விடுவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அர்ஜூன் சிங் தெரிவித்துள்ளார். அது சரியானதே என்று கூறியுள்ளார்.
ஆனால், ராஜீவ்காந்தி அரசு உத்தரவிட்டதால்தான் ஆன்டர்சனை அர்ஜூன் சிங் அரசு விடுவித்ததாக கூறப்படுவதை மட்டும் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications