தூங்கி கொண்டிருந்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வி.ஏ.ஓ. கைது
இளையான்குடி: இளையான்குடியில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை, மானபங்கம் செய்ய முயன்ற, கிராம நிர்வாக அதிகாரி சுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ளது நெஞ்சத்தூர். இதன் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சுந்தரம். இவருக்கு வயது 56. இன்னும் 2 வருடங்களில் இவர் ஓய்வு பெறவுள்ளார்.
இந்த நிலையில், இவர், கடந்த மே 19 ம் தேதி, இரவு 11 மணிக்கு தனியாக படுத்திருந்த கமலா என்ற 32 வயது பெண்ணை அவரது வீட்டிற்குள் சென்று, மானபங்கம் செய்ய முயன்றார்.
இதனால் தூக்கத்தில் இருந்த கமலா அலறல் சத்தம் போடவே, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். கூட்டத்தை பார்த்ததும் வி.ஏ.ஓ. தப்பித்து ஓட முயன்றார். இருப்பினும் ஊர்மக்கள் ஒன்று கூடி சுந்தரத்தைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். பின்னர் கமலா தனக்கு நேர்ந்த மானபங்கம் குறித்து மாவட்ட எஸ்.பி, மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சிவகங்கை ஆர்.டி.ஓ. பொன்னையா, வி.ஏ.ஓ. சுந்ரத்தை சஸ்பெண்ட் செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications