டெல்லியில் ஜாதி விட்டுக் காதலித்த காதல் ஜோடி கௌரவ கொலை!
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஜாதி மாறி காதலித்ததற்காக ஓர் இளம் ஜோடியை குடும்பத்தாரே கெளரவத்தைக் காக்க கொலை செய்துள்ள கொடுமை நடந்துள்ளது.
டெல்லியில் திங்கட்கிழமை அன்று 19 வயது பெண்ணும் 21 வயது ஆணும் காதலித்ததற்காக பெண்ணின் குடும்பத்தாரால் மணிக்கணக்கில் இரும்புக் கம்பியால் அடித்து, சித்ரவதை செய்யப்பட்டனர். இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிப்பவரான கிரன் தேவி கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 11.30 மணியளவில் காதல் ஜோடியை பெண் குடும்பத்தார் ஸ்வரூப் நகரில் உள்ள வீட்டிற்கு இழுத்து வந்தனர். அப்பெண் கதறுவது விடியற்காலை 3 மணி வரை கேட்டது. தன் காதலனின் உயிரை காப்பாற்ற அவள் எவ்வளவோ கெஞ்சியும் அவள் பெற்றோரும் உறவினர்களும் கேட்கவே இல்லை என்று கூறினார்.
அன்டை வீட்டாரின் குறுக்கிடலோ, அப்பெண்ணின் கதறலோ அந்த கொலைகாரர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றார்.
இந்த இரட்டைக் கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கொலையான ஆஷா சைனி தன் காதலன் யோகேஷுடன் வீட்டை விட்டு ஓடிப் போக திட்டமிட்டிருந்திருக்கிறார். யோகேஷ் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக இரண்டு உயிர்களை பலி கொடுத்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications