நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை

இலங்கையின் கல்கிசை, நீர்கொழும்பு, சீதுவை ஆகிய பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளில் ஓரினச் சேர்க்கையாளர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சீதுவை கடற்கரையோரத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் இருவரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். அவர்களை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த ஓரினச்சேர்க்கையாளர்களில் பலரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். போலீஸார் கோர்ட்டில் நிறுத்தியவர்களில் 2 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
கல்கிசை, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளின் கரையோரங்களில் ஏராளமான மதுபான விடுதிகளும் உல்லாசத் தளங்களும் காணப்படுகின்றன. சமூக சீர்கேடான நடவடிக்கைகள் அதிகரிக்க இவையும் காரணங்களாகும்.
நீர்கொழும்பில் வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள் சேரிப்புறங்களில் வாடகைக்கு வீடு வாங்கி, வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவு நேரங்களில் கடற்கரைக்கு வருவோரை வற்புறுத்தி உறவுக்கு அழைப்பது, மறுத்தால் மிரட்டுவது என செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களின் பிடியில் பள்ளிக்கூட சிறார்களும் சிக்கும் அவலமும் நடக்கிறது.
இந்த சட்டவிரோத செயலை போலீஸார் மட்டுமே தனித்து இதனைக் கட்டுப்படுத்த முடியாது. ஓரினச் சேர்க்கைக்கு சிறுவர்களும் இளைஞர்களும் அடிமையாவது தடுக்கப்பட வேண்டியது அவசியம்.
மேற்குலக நாடுகளில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை போன்ற கலாசார பாரம்பரியம் கொண்ட வளர்முக நாடுகளில் ஓரினச் சேர்க்கையானது எதிர் விளைவுகளையே தரக்கூடியதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications