மும்பையில் பலத்த மழை: புறநகர்ப் பகுதிகள் மிதக்கின்றன- கடல் சீற்றம்
மும்பை: தென் மேற்குப் பருவ மழை காரணமாக மும்பையில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மும்பையின் புறநகர்ப் பகுதிகள் மழை நீரில் மிதக்கத் தொடங்கியுள்ளன. கடலும் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தென் மேற்குப் பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இந்த மழை மேலும் சில நாட்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கன மழை காரணமாக புறநகர்ப் பகுதிகளான மலட், அந்தேரி, கோரேகான் உள்ளிட்ட பகுதிளில் மழை நீர் வெள்ளம் போல சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
புனேயிலும்
புனே நகரிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம்-மீனவர்களுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலுக்குள் போக வேண்டாம் என மீனவர்களை மும்பை மாநகராட்சி எச்சரித்துள்ளது. கடற்கரைக்குப் போக வேண்டாம் என பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17ம் தேதி வரை நீடிக்கும் இந்த கடல் சீற்றத்தின்போது, 4. 70 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுப்ப வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications