சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி
சேலம்: சேலம் அருகே பொறியியல் படிப்பு படித்து வந்த கல்லூரி மாணவியை உயிருடன் தீவைத்துக் கொளுத்த முயன்ற வாலிபரும், அந்தப் பெண்ணும் தீயில் கருகினர்.
சேலம், அஸ்தம்பட்டி, ஜான்சன்பேட்டையைச் சேர்ந்தவர் பாமா. இவர் திருச்செங்கோட்டில் பொறியியல் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த தியாகு என்பவர் ஒரு தலையாக பாமாவைக் காதலித்தார். ஆனால் இதை பாமா ஏற்கவில்லை.
இருந்தாலும் விடாமல் பாமாவை தொடர்ந்து பின் தொடர்ந்துதொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். இந்தநிலையில்நேற்று முன்தினம் பாமா தனியாக வீட்டில் இருப்பதைஅறிந்து அங்கு சென்றார் தியாகு.
தன்னை மணக்க முடியுமா, முடியாதா என்று கேட்டுள்ளார். கோபப்பட்ட பாமா, தியாகுவை வெளியேறுமாறு கூறி கத்தியுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த தியாகு, பாமாவின் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து பாமா மீது ஊற்றி தீவைத்து எரித்து விடுவேன், என்னைக் கல்யாணம் செய்து கொள் என மிரட்டினார். அஞ்சாத பாமா, முடியவேமுடியாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பாமா மீது தீவைத்து விட்டார் தியாகு. அப்போது அவர் மீதும் தீப் பிடித்துக் கொண்டது. இருவரும் போட்ட அலறலைப் பார்த்து அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் ஓடி வந்து மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications