அப்சல் குரு மரண தண்டனை-ஜனாதிபதி, பிரதமர், ப.சி ஆலோசனை
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வரும் ஜனாதிபதியின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் கலந்து கொள்கிறார். அவர் ஊட்டி செல்லும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
புதிய திட்டத்தின்படி அவர் வரும் ஜூன் 22ம் தேதி இரவு 7:50 மணிக்கு டெல்லியில் இருந்து இந்கிய விமானப் படை விமானம் மூலம் கோவை வருகிறார். மறுநாள் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அன்றிரவு 7 மணிக்கு அவர் டெல்லி புறப்படுகிறார். ஜனாதிபதி வருகையை ஒட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதியுடன் பிரதமர், ப.சிதம்பரம் ஆலோசனை:
இந் நிலையில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் குடியரசுத் தலைவர் மாளிகையில் விரிவான ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக ஜனாதிபதியும் பிரதமரும் தனியாக ஆலோசித்தனர். அதன்பின், அமைச்சர் சிதம்பரமும் அவர்களுடன் இணைந்துக் கொண்டார். இந்த சந்திப்பு 1 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தது.
போபால், நக்ஸல்கள் உள்ளிட்ட தேசிய, சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாகத் தெரிகிறது.
மேலும் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications