போபால் சம்பவம்: வாஜ்பாய் அரசும் அக்கறை காட்டவில்லை-பாஜக அமைச்சர்
போபால்: போபால் விஷவாயு சம்பவத்துக்குப் பிறகு யூனியன் கார்பைடு ஆலை நிர்வாகிகள் சரியாக தண்டிக்கப்படாததற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டஈடு கிடைக்காததற்கும் அப்போதைய மத்திய-மாநில காங்கிரஸ் அரசுகளோடு, அதன் பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசும் கூட பொறுப்பேற்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச மூத்த பாஜக தலைவரும் மாநில அமைச்சருமான பாபுலால் கெளர் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் அப்போதைய மத்தியப் பிரதேச காங்கிரஸ் முதல்வர் அர்ஜுன் சிங், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, அப்போதைய வெளியுறவு அமைச்சர் நரசிம்ம ராவ் ஆகியோர் மீது பாஜக உள்பட அனைத்து தரப்பினரும் புகார் கூறி வரும் நிலையில், மத்தியில் ஆட்சி செய்த பாஜக கூட்டணி அரசு ஏன் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு அளிக்கவும் ஏற்படுத்தப்பட்ட தனித் துறையின் அமைச்சராக உள்ளார் கெளர்.
மேலும் இப்போது முதல்வர் செளஹான் வெளிநாட்டில் சுற்றுப் பயணத்தில் உள்ள நிலையில் முதல்வர் பொறுப்பையும் அவர் தான் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உமா பாரதிக்குப் பின் சிறிது காலம் முதல்வராகவும் பதவி வகித்தார் கெளர். ஆனால், உட்கட்சிப் பூசலால அவரை நீக்கியது பாஜக தலைமை.
இந் நிலையில் பாபுலால் கூறுகையில், போபால் விஷவாயுக் கசிவு சம்பவம் தொடர்பாக தனி நபரையோ தனி ஒரு அரசியல் கட்சியையோ இனியும் குறை கூறுவதில் எந்தப் பயனும் இல்லை.
காங்கிரஸ் கட்சித் தலைமையும் அப்போதைய மத்திய அரசும் கூட இதற்குக் காரணம்.
அதே போல அடுத்து ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுகூட குற்றவாளிகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரித்து தண்டிக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு அப்போதைய பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானிக்கு நான் கடிதங்கள் எழுதினேன். ஆனால், எந்த பலனும் ஏற்படவில்லை.
வரும் வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெறவுள்ள விஷவாயு விவகாரம் தொடர்பான அமைச்சர்கள் குழு கூட்டத்துக்கு வருமாறு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அப்போது, இந்த விபத்து அமெரிக்காவில் நடந்திருந்தால் என்ன நஷ்டஈடு வழங்கப்பட்டிருக்குமோ அதையே போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், போபால் நகரின் அனைத்து வார்டுகளுமே பாதிக்கப்பட்டவையாகக் கருதப்பட வேண்டும் என்றும் கோருவேன் என்றார் பாபுலால் கெளர்.
ஆண்டர்சன் விவகாரம்-ராஜீவ் மீது இ.கம்யூ. குற்றச்சாட்டு:
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்குத் தெரியாமல் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவுக்கு சென்றிருக்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், இந்த விஷயத்தில் ராஜீவ் காந்திக்கு அவப்பெயர் வரக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி உண்மைகளை மறைக்க முயற்சிக்கிறது.
நஷ்டஈடு மசோதாவை அரசு சரியான முறையில் தயார் செய்ய இதுவே தகுந்த தருணம். போபால் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சேர்ந்துள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற டோவ் நிறுவனத்துக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications