கோல் இந்தியா, எச்.சி.எல். பங்குகளை விற்கும் மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

Coal India
டெல்லி: கோல் இந்தியா லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (எச்சிஎல்) நிறுவனங்களின் தலா 10 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

டெல்லியில் நடந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று இந்த ஆண்டு ரூ.40,000 கோடி திரட்ட அரசு முடிவு செய்துள்ளது. இந்த இரு அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றால் சுமார் ரூ.16,000 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு நிறுவனங்களின் ஊழியர்கள் வாங்கும் பங்கின் மொத்த மதிப்பில் 5% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும், இச் சலுகை ஆறு மாதங்கள் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல வேறு சில அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும் விற்க அரசு முடிவெடுத்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை ரூ.40,000 கோடியைச் சமாளிக்கவே, பொதுத்துறை பங்குகள் விற்பனை என முன்பு அறிவித்திருந்தது அரசு. ஆனால் தொலைத் தொடர்புத் துறையில் 3 ஜி ஏலம் மூலம் ரூ 1.06 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்றுள்ளது. உண்மையில் இந்த ஏலத்தில் மொத்தம் ரூ. 25,000 கோடி வந்தாலே பெரிய விஷயம் என்று ஆரம்பத்தில் அரசு கூறியிருந்தது.

எனவே எதிர்ப்பார்த்ததை விட பல மடங்மகு வருவாய் கிடைத்துள்ள நிலையில், பொதுத்துறை நிறுவனப் பங்குகளையும் விற்பதில் அரசு தீவிரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+