தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், கூலித் தொழிலாளர்கள், முறைகேடுகள், national rural employme
ஏழை மக்களுக்கு வழங்கப்படும் அரிசிகளை மொத்தமாக லபக் செய்து கன்டெய்னர்களில் அடைத்து கப்பல்கள் மூலம் அந்தமான், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடக, பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும், பல நூறு டன் முதல் ஆயிரம் டன் வரை கடத்தப்பட்டு வந்ததும், பிடிபட்டதும் தொடர்கதையாகி போனது.
இதையடுத்து மத்திய அரசு இத்திட்டத்தை முழுமையாக மாற்றி தேசிய ஊரக வளர்ச்சி 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்று அறிவித்தது.
அதன்படி அப்பணியில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் மட்டுமே பயன்பெறும் வண்ணம், திட்டம் தயாரிக்கப்பட்டு அடையாள அட்டைகள், வங்கி முலம் வரவு, செலவு, போன்றவைகளை செயல்படுத்தியது. (ஆனால் வங்கி மூலம் சம்பள பட்டுவாடா என்பது முழுமையாக செயல்படவில்லை என்பது தனிக்கதை) இப்படி திட்டத்தை மாற்றி ரூ.100ஐ கூலியாக நிர்ணயம் செய்தும் இத்திட்டம் முழுமையாக இந்திய கிராம மக்களை சென்றடைந்தும்,
பட்டுவாடாவிலுள்ள குளறுபடி, முறைகேடுகள் சீர்செய்யபடாமலேயே இருந்து வருகிறது.
நாட்டிலுள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளில் இத்திட்டத்தில் கூலி வேலை செய்யும் பயனாளிகளுக்கு ரூ.80, 60, 50 என்றுதான் இன்றுவரை கூலிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தினம், தினம் அல்லல்பட்டு வருகின்றனர்.
இத்திட்டத்தில் ஏற்படும் முறைகேடுகளை தொடர்ந்து ஆங்கங்கே பஸ் மறியல், முற்றுகை போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊரக துறை, வருவாய்துறை அதிகாரிகள், கண்காணிக்க அனுமதிக்கப்பட்டும், அவர்கள் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
ஆனால் இத்தொழிலாளர்கள் வறுமையோடு போராடி வரும் சூழலை அம்பலப்படுத்தும் விதமாக, சமீபத்தில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சம்பத்குமார் திடீரென்று கற்குடி கிராமத்தில் குளம் தூர் வாரும் பணியினை ஆய்வு செய்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளார். நீதிபதியின் அதிரடி விசிட் மூலம் கூலி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதும், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
கிராம மக்களை தேடி நீதி தேவதை செல்வதை யார்தான் மகிழ்ச்சி பொங்க ஏற்க மறுப்பார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர வேண்டும்.
இந்தத் திட்டம் உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். ஆனால் அதில் உள்ள குறைகளை நீக்கினால்தான் இதன் உண்மையான பலன் சரியானவர்களிடம் முறையாக போய்ச் சேரும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்













Click it and Unblock the Notifications