கோவையில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கோவை: கேரளாவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல் கோவையில் பரவாமல் தடுக்க முனனெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் கூறினார்.
கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் போது மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் கூறுகையில்,
மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பனறிக்காய்ச்சல் பரவி வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பாக கோவையில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தற்போது வரை 3096 பேருக்கு பன்றிக் காய்ச்சலின் அறிகுறி உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்துப் பாதைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்படும். இம்முகாமில் ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ ஆய்வாளர் அமர்த்தப்படும். இந்த குழு கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருவோரை பரிசோதனை செய்யும்.
யாருக்கேனும் பனறிக்காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். தமிழக-கேரள எல்லையில் உள்ள மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டு அமைக்கப்படும்.
மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அறிஞர்கள் மருத்தவ சோதனைக்கு உட்படுத்த மாட்டார்கள். கோவை விமான நிலையத்தில் மருத்துவ மையம் அமைக்கப்படும். விமானத்தில் வருபவர்கள் தங்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் இம்மையத்தில் சிகிச்சை பெறலாம்.
மாநாடு நடைபெறும் 5 நாட்களும் மருத்துவ பணிக்கு பிற மாவட்டங்களில் இருந்து 100 சுகாதாரத்துறை அதிகாரிகள் வர உள்ளனர்.
மாநாட்டிற்கு வருபவர்களுக்காக 5 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் தயாராக உள்ளது. மாநாட்டின் போது சுகாதாரமற்ற தண்ணீர் பாக்கெட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications