சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களும் போராட்டத்தில் குதித்தனர்-நாளை ஸ்டிரைக்
சென்னை: தமிழை கோர்ட் மொழியாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் போராட்டம் பரபரப்படைந்துள்ளது.
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக அறிவிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்கள் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை தமிழகம் முழுவதும் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் அனைத்து வக்கீல்களும் குதிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். வக்கீல்கள் அங்கயற்கன்னி, பார்த்தசாரதி, காசிநாதபாரதி, ராஜு, சேசுபாலன் ராஜா ஆகியோர் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பால் கனகராஜ் பேசுகையில்,
தமிழை வழக்கு மொழியாக்க கோரும் இந்த போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். கொள்கை அளவிலாவது தமிழை வழக்கு மொழியாக்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு உடனடியாக அதை அறிவிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி நாளை ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
நாளை திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் கோர்ட் புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபடவுள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications