108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 200 வேன்கள்-அமைச்சர் பன்னீர் செல்வம்
கடலூர்: தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 200 வேன்கள் வழங்கப்படவுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
கடலூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் பேசுகையில்,
தமிழகத்தில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1,17,057 பேருக்கு ரூ.326 கோடி செலவிடப்பட்டு இருக்கிறது. பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 700 பேருக்கு ரூ.2.5 கோடி செலவு செய்யப்படுகிறது.
ஏழை மக்களின் உயிர் காக்கும் சேவையைச் செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில், தற்போது 385 வாகனங்கள் உள்ளன. தொலைபேசி அழைப்பு வந்த 15 நிமிடத்தில் இவை நோயாளிகளை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்க்கின்றன.
தற்போது இந்த கால் மணி நேரம் என்பதை ஐந்து நிமிடமாக குறைக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் சேவைக்காக கூடுதலாக 200 வேன்கள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையின் கால அளவு மேலும் குறைந்து கூடுதல் மக்களுக்குப் பலன் கிடைக்கும் என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications