திமுகவினரின் மணல் திருட்டால் கனிம வளம் குறைகிறது-ஜெ.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றுப் படுகைகளில் இருந்து தி.மு.க-வினரால் மணல் திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கப்படு வதன் காரணமாக ஆற்று நீர் மாசுபடுவதாகவும், இவ்வாறு மாசுபடிந்த நீரை சுத்திகரிக்காமல் நீரேற்றும் நிலையங்களுக்கு எடுத்துச்சென்று குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக குழாய்கள் அடிக்கடி பழுதடைந்து போவதுடன், மாசு படிந்த நீருடன் சாக்கடை நீரும் கலக்கக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மாசு படிந்த நீரும், கழிவு நீரும் கலந்த தண்ணீரை பயன்படுத்துவதன் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாக்கப்படுகிறார்கள்.
தி.மு.க-வினரின் இது போன்ற மணல் கொள்ளை காரணமாக நாட்டின் கனிம வளம் குறைந்து, அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் மக்களும் பெருத்த இன்னலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
வரம்பு மீறி மணல் கொள்ளையடிப்பது குறித்தும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாதது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொது மக்கள் தெரிவித்தும், அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதோடு, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீரை உடனடியாக வழங்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டக்கழகத்தின் சார்பில் நாளை வெள்ளிக் கிழமை காலை 10.30 மணி அளவில், கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கழகப் பொருளாளர் ஓ. பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications