சுங்கச்சாவடி ஊழியரை துப்பாக்கியால் சுட்டதாக திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு
திருச்சி: மருங்காபுரி திமுக ஒன்றிய செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவாகியுள்ளது.
விராலிமலை மெயின்ரோட்டில் சுங்கவரி மையம் ஒன்று உள்ளது. சுங்கவரித் துறையினர், நேற்று இரவு 11 மணி அளவில் அங்கு வந்த ஸ்கார்பியோ கார் ஒன்றை நிறுத்தி 40 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளனர். அந்த காரில் மருங்காபுரி திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் இருந்திருக்கிறார்.
அருகில் உள்ள மருங்காபுரிக்கு செல்ல 40 ரூபாயா என்று அவர் கேட்டபோது சுங்கவரி பொறுப்பாளர் பழனிச்சாமிக்கும், செல்வராஜுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரை அவ்விடத்தை செல்ல பழனிச்சாமி அனுமதிக்கவில்லை. இதையடுத்து, மருங்காபுரியில் இருந்து வேறு ஒரு காரை வரவழைத்து செல்வராஜ் சென்றுள்ளார்.
இந்நிலையில் பழனிச்சாமி இன்று விராலிமலை காவல்நிலைய ஆய்வாளர் மயில்சாமியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், சுங்கவரி கட்டணம் கேட்டதற்காக தன்னை திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட 6 பேர் துப்பாக்கியால் சுட்டனர் என்று கூறியுள்ளார். மேலும், அந்த துப்பாக்கி தோட்டாக்களையும் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார், செல்வராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது ஆயுத தடை சட்டம், கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கு எதிராக சுங்கவரி பொறுப்பாளர் பழனிச்சாமி மீது திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜூம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் சுங்கவரி மையத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அவர்கள் வந்த ஸ்கார்பியோ காரின் கண்ணாடிகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications