குற்றாலம் அருவியில் 'விஐபிக்கள்' தொல்லை!
தென்காசி: குற்றாலத்தில் விஐபி என்ற பெயரில் ஒரு சிலரை மட்டும் தனியாக குளிக்க அனுமதிப்பது, வரிசையில் நிற்கும் சுற்றுலா பயணிகளை அதிருப்தி அடைய செய்து வருகிறது.
குற்றாலத்தில் மெயின் அருவியில் தண்ணீர் சுமாராக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.
மதியம் சுமார் 2 மணி அளவில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தபால் நிலையம் வரை சுற்றுலா பயணிகள் அணிவகுத்து நிற்கையில், ஏதோ விஐபி என்று கூறிய சிலர் தனியாக குளிக்க வேண்டும் என்று போலீசாரிடம் நிர்ப்பந்தித்தனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் யாரேனும் விஐபியாக இருந்தால் நமக்கு ஏதற்கு வம்பு என்று நினைத்து அத்தனை கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் அவர்களை மட்டும் தனியாக சிறிது நேரம் குளிக்க அனுமதித்தனர்.
அதிலும் ஆண்கள் குளிக்கும் பகுதியிலேயே விஐபி பெண்களும் குளித்தனர். இதனால் வரிசையில் காத்திருந்தோர் எரிச்சல் அடைந்தனர்.
களக்காட்டில் போதை பார்ட்டிகளின் தொல்லை!:
களக்காடு தலையணை பகுதியில் மது அருந்தும் கும்பல் மது பாட்டில்களை தண்ணீருக்குள் உடைத்து போடுவதால் சுற்றுலா பயணிகள் காயமடைந்து வருகின்றனர்.
களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை பகுதி உள்ளது. இங்கு ஓடும் பச்சையாற்றில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த சாரல் மழையால் தலையணையில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் தலையணைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மது அருந்தும் கும்பலால் தலையணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலையணை பச்சையாற்றில் மது அருந்தும் கும்பல் மதுகுடித்து விட்டு பாட்டில்களை ஆற்றுக்குள் வீசியெறிந்து உடைத்து விடுகின்றனர்.
இதனால் ஆற்றில் குளிக்கும் சுற்றுலா பயணிகளை கண்ணாடி துண்டுகள் பதம் பார்க்கின்றன. ஆர்வமுடன் குளிக்க செல்லும் பயணிகளை பாட்டில் துண்டுகள் கீறி விடுவதால் ரத்த காயங்களுடன் வெளியில் வருகின்றனர். கடந்த வாரம் மட்டும் பல வெளியூர் சுற்றுலா பயணிகள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications