தேர்தலின்போது கூட்டணி மாறும்-செங்கோட்டையன் ஆரூடம்
சென்னை: ஜெயலலிதா என்ன செய்து கொண்டிருக்கிறார் என சிலர் கேட்கிறார்கள். தேர்தலின்போது கூட்டணி மாறும், நிரந்தர முதல்வராக ஜெயலலிதா வருவார் என்று கூறியுள்ளார் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன்.
தமிழில் உயர்நீதிமன்றத்தில் வாதாட அனுமதி அளிக்கக் கோரி சென்னையில் நேற்று நடந்தஆர்ப்பாட்டத்தின்போது செங்கோட்டையன் பேசுகையில்,
மற்ற மாநிலங்களில் உயர்நீதிமன்றங்களில் தாய்மொழியில்தான் வாதாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி பெற்றுத்தரவில்லை.
ஜெயலலிதா என்ன செய்கிறார் என்று சிலபேர் நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் வருகிற சட்டசபை தேர்தலின்போது நிச்சயமாக கூட்டணி மாறும். அப்போது தமிழ்நாட்டில் நிரந்தர முதல்வராக ஜெயலலிதா வருவார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்கு அனுமதி பெற்றுத் தருவார். 5-வது உலக தமிழ் மாநாட்டை எம்.ஜி.ஆர். நடத்தினார். 8-வது உலக தமிழ் மாநாட்டை நடத்தி அறிவியல் தமிழை கொண்டுவந்தவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் இன்று பல பிரச்சினைகள் உள்ளது. கல்வி கூடங்களில் சுகாதாரம் இல்லை. இதை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை என்றார் அவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications