ராஜ்யசபா எம்.பி. பதவி: என்.டி.ஆர் சிலையில் தூக்கில் தொங்கிய தெ.தேசம் முன்னாள் மேயர்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பங்கி அனந்தய்யா, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவார்.
மேயராகவும் இருந்துள்ள இவர் சமீபத்தில் தனது கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ராஜ்யசபா எம்.பி. பதவி கேட்டார். ஆனால் அவருக்கு சீட் தர நாயுடு மறுத்து விட்டார்.
இதை தட்டிக் கேட்ட அனந்தய்யாவை கட்சியை விட்டும் நீக்கினார். இதனால் வேதனையடைந்த அனந்தய்யா கர்னூல் நகர பஜாரில் உள்ள கட்சியின் நிறுவனர் என்.டி.ராமாராவின் சிலையில் தூக்கில் தொங்கினார்.
தூக்கில் துடிதுடித்த அவரை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் காப்பாற்றி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அனந்தய்யா தூக்கில் தொங்கியபோது பற்களுக்கு இடையே சிக்கி நாக்கு சிறிதளவு துண்டாகியுள்ளது. முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது இதயத் துடிப்பும் சீ்ர்குலைந்துள்ளது. இதனால் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
தெலுங்கானாவில் 10 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்:
இந் நிலையில் ஆந்திராவில் இருந்து பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் சில மாதங்களுக்கு முன் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்தத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.
இந்தத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகியவை தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. நாயுடு தனது 7 வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications