கார்ட்டூன் கலைஞர் ஆர்.கே.லட்சுமணுக்கு பக்கவாதம்-மருத்துவமனையில் கவலைக்கிடம்
மும்பை: பிரபல கார்ட்டூன் கலைஞர் ஆர்.கே.லட்சுமணுக்கு மூன்று முறை லேசான பக்கவாதம் தாக்கியதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ள டாக்டர்கள் அதேநேரம் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
86 வயதாகும் லட்சுமணுக்கு வியாழக்கிழமை புனேவில் பக்கவாதம் தாக்கியது. இதையடுத்து அங்குள்ள சஹாயத்ரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரை மேலும் இரண்டு முறை பக்கவாதம் தாக்கியது. இதனால் அவரது உடலின் வலது பகுதியும், பேச்சும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து விமான ஆம்புலன்ஸ் மூலம் அவரை மும்பையில் உள்ள ப்ரீச்கன்டி மருத்துவமனைக்குக் கொண்டு வந்து ஞாயிற்றுக்கிழமை மாலை
சேர்த்தனர்.
சர்க்கரை வியாதியஸ்தரான லட்சுமணுக்கு தற்போது சிறுநீரக பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நோய்த் தோற்றும் ஏற்பட்டுள்ளதாக லட்சுமணின் நண்பரும், டாக்டருமான விங்கர் குஞ்சால் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு பக்கவாதம், சிறுநீரகப் பிரச்சினை, நோய்த் தோற்று ஆகிய மூன்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானு என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல நரம்பியல் நிபுணர் பி.எஸ்.சிங்கால் தலைமையிலான டாக்டர்கள் குழு லட்சுமணுக்கு சிகிச்சை அளித்து வருவதாக லட்சுமணின் மகன் ஸ்ரீனிவாஸ் லட்சுமண் தெரிவித்தார்.
லட்சுமணுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஸ்டிரோக் வந்தது. இதனால் அவரது உடலின் இடது பகுதி பாதிக்கப்பட்டது. பின்னர் அது படிப்படியாக சரியாகி புனேவில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு அடுத்தடுத்து மூன்று முறை பக்கவாதம் தாக்கியதால் அவரது உடல்நிலை மேலும் பலவீனமடைந்துள்ளது.
மகசேசே விருது பெற்றவரான லட்சுமணின் காமன் மேன் கார்ட்டூன் பாத்திரம் மிகப் பிரபலமானது. பத்மவிபூஷன் விருது பெற்றுள்ள லட்சுமணின் கார்ட்டூன் சித்திரங்களுக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications