ஓகேனக்கல் குடிநீர் திட்டம்: சாம்ராஜ் நகரில் பந்த்!

ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட பல்வேறு கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந் நிலையில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இன்று பந்த் நடத்த வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்தன.
இதையடுத்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளிலிருந்து திம்பம், ஆசனூர் வழியாக கர்நாடகம் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் நேற்று இரவே கர்நாடகம் பன்னாரி எல்லைப் பகுதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டன.
மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் வாகனங்கள் தலமலை வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
ஓசூர் வழியாக கர்நாடகம் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கப்பட்டன.
போராட்டம் வேண்டாம்-எதியூரப்பா:
இந் நிலையில் ஓகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக போராட்டம் நடத்த வேண்டாம், அந்தப் பிரச்சனையை அரசு சுமூகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாஜக அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இந்த இரு ஆண்டுகளில் அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் சுமுக உறவை வைத்துள்ளது. அது தொடரும்.
மாநிலங்களுக்கு இடையே பல பிரச்சனைகள் உள்ளன. அவை இப்போது ஏற்பட்ட பிரச்சனைகள் அல்ல. இந்த பிரச்சனைகளில் பலவற்றை பாஜக அரசு வந்த பிறகு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
சில பிரச்சனைகளுக்குத் தீர்வும் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் ஓகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கலுக்கும் தீர்வு காணப்படும். விரைவில் இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருடன், கர்நாடக தலைமைச் செயலாளர் எஸ்.வி. ரங்கநாத் பேச்சுவார்த்தை நடத்துவார்.
இந்தப் பிரச்சனையை அரசு சுமூகமாக பேசித் தீர்க்கவே விரும்புகிறது. எனவே, கன்னட சங்கத்தினர் யாரும் போராட்டம் நடத்த வேண்டாம்.
செம்மொழி மாநாட்டில் கர்நாடக அமைச்சர்:
கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கர்நாடக அரசு சார்பில் அமைச்சர் ராமச்சந்திர கெளடா கலந்து கொள்வார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி, மூத்த அமைச்சர் ஒருவரை நேரில் அனுப்பி அழைப்பிதழ் கொடுக்கச் செய்தார்.
அவர் அன்புடன் அழைப்பிதழ் கொடுத்து இருப்பதால் நானே நேரில் சென்று கலந்து கொள்ள விரும்பினேன். ஆனால் சட்டசபை கூட்டம் தொடங்க இருப்பதால் கலந்து கொள்ள முடியவில்லை.
இதனால் கர்நாடக அரசு சார்பில் மூத்த அமைச்சரான ராமச்சந்திர கெளடாவை அனுப்பி வைக்க உள்ளேன் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications