இந்தியாவில் மது விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு!

குடிமக்களை விட குடிகார மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் போல. அந்த அளவுக்கு குடிக்காத மக்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு மது விரும்பிகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர்.
பண வீக்கம் ஒரு பக்கம் 'விஸ்க் விஸ்க்' என்று உயர்ந்து வருவது போல மது அருந்துவோரின் எண்ணிக்கையும் 'விஸ்கி விஸ்கி' என உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்தியாவின் 'குடி' மக்களுக்கு விஸ்கிதான் ரொம்பப் பிரியமான மது பானமாக உள்ளது. அடுத்த ஐட்டம் ரம்.
எதற்கெடுத்தெலாம் சர்வே நடத்தும் மேற்கத்திய நிறுவனங்கள் இந்திய மக்களின் குடிப்பழக்கம், எந்த மது பானத்தை மக்கள்தேர்வு செய்கிறார்கள், எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள், இந்த எண்ணிக்கை இப்போது எப்படி உள்ளது, இது எதிர்காலத்தில் எப்படி உயரும் என்பது குறித்து லண்டனைச் சேர்ந்த சர்வதேச ஒயின் மற்றும் மது ஆவண நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின் படி, இந்தியாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கையும், விற்பனையும் அதிகரித்துக் கொண்டே போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் 20 கோடி கேஸ் (அதாவது அட்டைப் பெட்டி- ஒரு பெட்டியில் 12 மது பாட்டில்கள்) மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 18 லட்சம் கேஸ் மது விற்பனையாகுமாம். இது கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவில் விற்பனையாகும் மது வகைகளில் விஸ்கிக்குத்தான் முதலிடம். அதாவது விற்பனையில் பாதியை விஸ்கியே குடித்து விடுகிறதாம். கடந்த ஆண்டு 119 மில்லியன் கேஸ் விஸ்கி விற்பனையானதாம். இது இந்த ஆண்டு 131 மில்லியன் கேஸ் ஆக எகிருமாம்.
ரம் விற்பனையப் பொருத்தமட்டில் கடந்த ஆண்டு 39 மில்லியன் கேஸ் ஆக இருந்தது. நடப்பாண்டில் 42.4 சதவீத உயர்வு இருக்குமாம்.
பீர் விற்பனையில் என்றுமே சுணக்கம் இருந்ததில்லை. அதுவும் இப்போது நாட்டின் பல பகுதிகளில் இன்னும் வெயில் காலமாக இருப்பதால் அது நல்ல நிலையிலேயே விற்று வருகிறதாம். கடந்த ஆண்டு 1 கோடியே 41 லட்சம் லிட்டர் பீரை குடிமக்கள் குடித்துள்ளனர். இது நடப்பாண்டில் 1 கோடியே 52 லட்சம் லிட்டர் பீராக உயருமாம்.
என்னதான் வெளிநாட்டு சரக்குகள் இந்திய மது பான சந்தையில் தள்ளாட்டம் போட்டாலும், லோக்கல் சரக்குகள்தான் துள்ளாட்டம் போட்டு நல்ல விற்பனையைக் கண்டு வருகிறதாம். அதிலும் விஜய் மல்லையாவின் யுபி நிறுவனத் தயாரிப்புகளான மெக்டோவெல், பேக்பைப்பர் ஆகிய இரு வகைகளும் செமத்தியான விற்பனையை கொடுக்கிறதாம்.
சியர்ஸ்..!
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications