ஆசிய கோப்பை: இறுதி லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை
தம்புல்லா: இலங்கையுடன் நடந்த ஆசியா கோப்பை போட்டியின் இறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா படு தோல்வி அடைந்தது.
10-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புல்லா நகரில் நடந்து கொண்டிருக்கிறது. 4 நாடுகளுக்கு இடையிலான இந்த போட்டியில் பாகிஸ்தான் (ஒரு வெற்றி, 2 தோல்வி) மற்றும் வங்காளதேச (3 தோல்வி) அணிகள் வெளியேறி விட்டன.
இதை அடுத்து இந்தியா-இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இறுதிப்போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில் நேற்று இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் நடந்தது. இதில் காயம் காரணமாக ஷேவாக் பஙகேற்கவில்லை.
டாஸ்' ஜெயித்த இலங்கை அணி இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கவுதம் கம்பீரும், தினேஷ் கார்த்திக்கும் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் தந்தனர். கம்பீர் 23 ரன்கள் எடுத்த நிலையில், ரன்டிவால் கேட்ச்' செய்யப்பட்டார்.
தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடி 40 ரன்களைச் சேர்த்தார். விராட் கோலி (10 ரன்), சுரேஷ் ரெய்னா (18 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களுடன் வெளியேறிய நிலையில், ரோகித் ஷர்மாவும், கேப்டன் டோனியும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
39-வது ஓவரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பர்வீஸ் மகரூப், ஹாட்ரிக்' விக்கெட் எடுத்து இந்திய அணியை நிலை குலைய வைத்தார்.
இது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிகழ்ந்துள்ள 26-வது ஹாட்ரிக் சாதனையாகும். வாஸ் (2 முறை), மலிங்காவுக்கு அடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது இலங்கை பவுலர் என்ற சிறப்பையும் 25 வயதான மகரூப் பெற்றார்.
இப்படியாக தட்டுத் தடுமாறி ஆடிய இந்தியா 42.3 ஓவர்களியே அனைவரையும் இழந்து, 209 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 10 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை மகரூப் எடுத்தார். இவ்வாறு இவர் 5 விக்கெட் கைப்பற்றுவது இது 2-வது முறையாகும்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேப்டன் சங்கக்கரா 73 ரன்களைக் குவித்தார். மஹேலா ஜெயவர்த்தனே 53 ரன்களைச் சேர்த்தார். இந்திய தரப்பில் ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளும், பிரவீன்குமார் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தப் போட்டித் தொடரின் மூன்று ஆட்டங்களிலும் இலங்கை வென்றுள்ளது. இந்தியா 2 போட்டிகளில் வெற்றி கண்டது. நாளை இரு அணிகளும் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications