ரூ.54 கோடி மோசடி: சிட்டி லிமோசின் இயக்குனர்கள் கைது
சென்னை: சிட்டி லிமோசின் நிதி நிறுவனம் ரூ 54 கோடி நிதி மோசடி செய்ததாக அதன் இயக்குநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது, சிட்டி லிமோசின் என்ற நிதி நிறுவனம். மேலும் 13 வெவ்வேறு பெயர்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கொடுத்த மோசடி புகாரை அடுத்து, அதன் இயக்குனர்கள் அப்துப் மஜீத் மற்றும் அவரது உறவினர் கீதா ரசாக்கி ஆகியோரை மும்பை போலீஸ் கைது செய்து ஜெயிலில் அடைத்தது.
தமிழகத்திலும் இந்த நிறுவனத்தின் மீது பல மோசடி புகார்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மும்பையில் இருந்து இவர்கள் 2 பேரையும் சிறை கைதி மாற்று வாரண்டு (பி.டி. வாரண்டு) மூலம் சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இவர்களை 13 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சென்னையில் உள்ள நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்காக, ஜெயிலில் இருந்து அப்துல் மஜீத், கீதா ரசாக்கி ஆகியோரை சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இந்த மனுவை நீதிபதி யூசுப் அலி விசாரித்தார். தொடர்ந்து அவர்கள் இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications