17 சதவீதத்தை நெருங்கும் உணவுப் பணவீக்கம் !
டெல்லி: இந்தியாவின் உணவுப் பணவீக்கம் கிட்டத்தட்ட 17 சதவீதத்தை நெருங்குகிறது.
கடந்த வாரம் 16.12 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்க அளவு, நடப்பு வாரத்தில் 16.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது சற்று அதிகபட்ச உயர்வுதான் என்பதால், பணவியல் கொள்கையை இன்னும் நெருக்க வேண்டிய அவசியத்துக்குள்ளாகியுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.
எரிபொருள்களுக்கான குறியீட்டெண்ணில் இந்த வாரம் மாறுதல் ஏதுமில்லை. அதே 13.18 சதவீதமாகவே உள்ளது.
இந்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்ட பின் 10 ஆண்டு கடன் பத்திரங்களின் வருவாய் அளவு 7.60லிருந்து 7.62 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சமீபத்தில் 50 புள்ளிகள் அடிப்படையில் இருமுறை வட்டி விகிதங்களை உயர்த்தியது. இந்த நிலையில் மேலும் பணவீக்கம் உயர்ந்து வருவதால் வரும் ஜூலை 27-ம் தேதி மேலும் வட்டிவீத உயர்வை அறிவிக்கும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆண்டு பணவீக்க வீதத்தைப் பொருத்தவரை கடந்த மே மாத நிலவரம் 10 சதவீதமாக இருந்தது.
பெட்ரோலிய பொருள்கள் விலை உயர்வு குறித்து விவாதிக்க நாளை நடக்கும் கூட்டத்துக்குப் பிறகு பணவீக்கத்தின் அளவில் மேலும் மாறுதல்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜூன் இறுதி மற்றும் ஜூலையில் பருவமழை சரியாக இருந்தால், உணவுப் பணவீக்கம் மற்றும் பொதுப் பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளதாகவும், மழை பொய்த்தால் நிலைமை விபரீதமாகும் என்றும் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications