'அவ்வை காலத்தில் கருணாநிதி இருந்திருந்தால் அதியமான் ஏமாந்திருப்பார்'-ஈரோடு தமிழன்பன்
கோவை: இன்று காலை கவிஞர் வைரமுத்து தலைமையில் கோவையில் நடந்த செம்மொழி தமிழ் மாநாட்டின் ஒரு பகுதியாக, கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம் என்ற தலைப்பிலான கவியரங்கத்தில் முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து பாடி ஈரோடு தமிழன்பன் வாசித்த கவிதை...
''பிறக்காத குழந்தைக்கும் தொட்டில் கட்ட அவரிடம்தான் இதயம் இருக்கிறது. இருப்பும் இருக்கிறது.
கலைஞர் என்பது தாயின் ஆண்பால் பெயர்.
அவர் வேட்டி கட்டுகிறார்.
அவர் இதயம் எப்போதும் கசங்காத புடவையோடுதான்.
அவரின் கபால களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களை விட
ஈர பெண் எண்ணங்களே அதிகம்.
இல்லாவிட்டால் கோபாலபுரத்து வீட்டை கொடையாக தர முடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில் இவர் இருந்திருந்தால்
அந்த அதியமான் ஏமாந்திருப்பார்.
அவருடைய சங்கப் பாடல்களுக்கெல்லாம்
கலைஞர் சபாநாயகர் ஆகியிருப்பார்.
அந்த நெல்லிக்கனி இன்று இருந்தால் கலைஞர் யாருக்கு கொடுப்பார்?
வாலிக்கா? வைரமுத்துவுக்கா? அப்துல் ரகுமானுக்கா? இல்லை எனக்கா?.
எங்களில் யாருக்கும் தரமாட்டார்.
தமிழ்த்தாய்க்கு தந்து அவள் தின்று துப்பிய விதைகளை
ஒவ்வொரு கவிஞரின் வீட்டு வாசலிலும் விதைத்து வைப்பார்.
கவிதையை ஜனநாயகப்படுத்தியவர் கலைஞர்.
அதனால்தான் கவிஞர்களும் கலைஞருக்கு வாக்களிக்கிறார்கள்!''
என்றார் தமிழன்பன் தனது கவிதையில்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications