ஈழப் பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்பவே செம்மொழி மாநாடு-வைகோ
தூத்துக்குடி: ஈழப் பிரச்சினையிலிருந்தும், ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு உதவிய மத்திய அரசையும், திமுக அரசையும் மக்கள் கவனத்திலிருந்து திசை திருப்பவே செம்மொழி மாநாடு நடத்துகிறார் முதல்வர் கருணாநிதி என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், இலங்கை உள்நாட்டுப் போரில், ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுத்து, பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலைக்கு உதவியது இந்திய அரசு; அதற்கு உடந்தையாக இருந்தது தமிழக தி.மு.க., அரசு. அப்பிரச்னையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, தமிழக முதல்வர் கருணாநிதி, கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துகிறார்.
உண்மையில், இது செம்மொழி மாநாடல்ல; ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் மாநாடு. செலவிற்கு பணம் கொடுத்து இலவசமாக பஸ்களில் மாநாட்டிற்கு தி.மு.க.,வினர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகக் கூறி, அந்த அணையை உடைக்க கேரள அரசு சதி செய்கிறது. அதற்காக, ம.தி.மு.க., சார்பில் கேரளாவுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை சாலையில் மறிப்பது உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினோம். அங்கு புதிய அணை கட்டப்பட்டால் மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து தென்மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
இந்த அணைப் பிரச்னையில் நாங்கள் மத்திய, கேரள அரசுகளுக்கு எதிராக மட்டுமே போராட்டம் நடத்துகிறோம்; தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications