தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு-பொன். ராதாகிருஷ்ணன்
ஓசூர்: தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே தமிழ்செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்துவதாக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஓசூர் அடுத்த தளியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதாக கட்சி மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த முறை ஆட்சியில் ஏழு முறை பெட்ரோல், டீஸல் விலையை உயர்த்தினர். தற்போது, இது வரை மூன்று முறை பெட்ரோல், டீஸல் விலையை உயர்த்தி உள்ளனர்.
இந்த விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விலை உயர்வு விஷம்போல் உள்ள நிலையில், மீண்டும் விலை உயர்ந்தால் சாதாரண மக்கள் வாழ்க்கை நிலை கேள்வி குறியாகும்.
பெட்ரோல், டீஸல் விலை உயர்வை வாபஸ் பெற கோரி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் தற்போது கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றது. குறிப்பாக இளைஞர்கள் அதிக அலிவில் கொலை செய்யப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். சமூக விரோத சம்பவங்களை தடுக்க முடியாத செயலற்ற அரசாக தமிழக அரசு உள்ளது.
தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே கோவையில் உலக தமிழ்செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்துகின்றது. தமிழ் மொழிக்கு நாங்கள் உரிய மரியாதை எப்போதும் தருவோம். ஆனால், திமுக துதிபாடும் தமிழ் மாநாட்டை தான் எதிர்கிறோம்.
திமுக அரசு துதிபாடும், வாழ்த்து பாடும் மாநாடுகளை நிறுத்திவிட்டு, மக்களுக்கு பயனுள்ள திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications