மூத்த காவல்துறை அதிகாரி அமீத் வர்மா திடீர் மரணம்
சென்னை : மூத்த காவல்துறை அதிகாரியும், கூடுதல் டிஜிபியுமான அமீத் வர்மா சென்னையில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
வர்மாவுக்கு வயது 55. போலீஸ் அகாடமியின் கூடுதல் டிஜிபியாகஇருந்து வந்தார். அவருக்கு உடல் நலம் பாதித்ததால், மே மாதம் 30ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மரணமடைந்து விட்டார்.
இதையடுத்து அவரது உடல் ஐஜி குடியிருப்புக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று அமீத் வர்மாவின் உடல் சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
அமீத் வர்மா உ.பி. மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். 1978ம் ஆண்டு தமிழக பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றத் தொடங்கினார். இந்தி தவிர ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு மொழிகளில் புலமை பெற்றவர்.
1980-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கூடுதல் போலீஸ் எஸ்.பியாக முதன் முதலில் பதவி வகித்தார்.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் எஸ்.பியாக இருந்துள்ளார். 1994ம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். ஆயுதப்படை, ரயில்வே ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார். சென்னை போலீஸ் இணை கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.
1999-ம் ஆண்டு ஐ.ஜி.யானார். 2005-ம் ஆண்டு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications