தேனி மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு துண்டிப்பு-நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேனி மாவட்டம் கூடலூர் முதல் வைகை அணை வரை உள்ள விவசாயப் பணிகளுக்கான மின் இணைப்புகளை துண்டித்திருப்பதைக் கண்டித்து நாளை தேனி மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

கூடலூர் முதல் வைகை அணை வரை ஆற்றின் கரை அருகே சுமார் 300 விவசாய மின் இணைப்புகள் உள்ளன. நாற்பது ஆண்டு காலமாக இந்த மின் இணைப்புகளின் மூலம் மோட்டாரைப் பயன்படுத்தி மேற்படி பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதன் மூலம் 2000 விவசாயக் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.

குடிநீர்ப் பிரச்சினை வரும் போது மேற்படி விவசாய மின் இணைப்புகளை இரண்டு மாதகாலத்திற்கு துண்டிப்பது நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கம். அதன்படி, கோடை காலத்தில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேற்படி மின் இணைப்புகளை மாவட்ட நிர்வாகம் துண்டிக்கும்.

இரண்டு மாதங்கள் முடிந்தவுடன் மின் இணைப்புகளை மீண்டும் வழங்கி விடுவது வழக்கம். ஆனால், மூன்று மாதங்கள் முடிந்து விட்ட நிலையிலும் துண்டிக் கப்பட்ட மின் இணைப்பை மாவட்ட நிர்வாகம் வழங்க வில்லை.

விவசாயிகளின் வேதனை இத்துடன் நின்று விட வில்லை. ஆற்றின் கரை யோரம் உள்ள மின் இணைப்புகள், கிணறுகள், பைப் லைன்கள் அனைத் தையும் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் மேற்படி பகுதிகளின் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. ஏழை விவசாயிகளின் வாழ் வாதாரம் வதைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள், விவசாயிகள் குறை தீர்க்கும் நாளன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், குடிநீர்ப் பிரச் சினையும் இல்லாத சூழ்நிலையில், விவசாய மின் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டியது மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் கடமையாகும்.

ஆனால், அதைச் செய்யாததோடு மட்டுமல்லாமல், மின் இணைப்பை தொடர்ந்து பெற முடியாத அளவுக்கும், மோட்டாரை பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாத அளவுக்கும் மோசமான நிலைமையை மாவட்ட ஆட்சி நிர்வாகம் உருவாக்கி இருக்கிறது. இதன் விளைவாக, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளன.

கூடலூர் முதல் வைகை அணை வரை முல்லைப் பெரியாறு ஆற்றின் கரை அருகே துண்டிக்கப்பட்டுள்ள சுமார் 300 மின் இணைப்புகளை உடனே வழங்க வலியுறுத்தி தேனி மாவட்டக் கழகத்தின் சார் பில், நாளை காலை 10 மணி அளவில், மதுரை ரோடு தேனி கனரா வங்கி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., தலைமையிலும், தேனி மாவட்டக் கழகச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+