வேலூரிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் நளினி!
சென்னை வேலூர் சிறையிலிருந்து புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார் நளினி.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நளினி கடந்த 1991ம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கேயே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இந்த நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அன்று முதல் வேலூர் சிறையில் இருந்து வந்தார் நளினி.
இந்த நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்தச் சூழ்நிலையில் தனக்கு வேலூர் சிறையில் பல்வேறு தொல்லைகள் தரப்படுவதாகவும், கொல்ல முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் நளினி. மேலும் தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்தப் பின்னணியில் தற்போது புழல் சிறைக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளார் நளினி.
நிர்வாக நடவடிக்கைகளுக்காக நளினி புழல் சிறைக்கு மாற்றப்பட்டிருப்பதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications