ஆகஸ்ட் 2 முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

சமீபத்தில், மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3.50 ம், டீசல் விலையை ரூ. 2 ம், சமையல் கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 35 ம் உயர்த்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதாவது:
லாரி தொழில் நலிவடைந்து வருகின்றது. எனவே, தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகளிடம் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அவற்றை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இந்தியாவில் தேவைக்கு அதிகமான லாரிகள் உள்ளன. அதனால் தேவையான அளவு லோடும், லாபமும் கிடைப்பது இல்லை.
மேலும், சுங்க சாவடிகளில் ஒரே மாதிரியான சுங்கவரி வசூல் செய்வது இல்லை. ஒவ்வொரு சுங்கச்சுவாடியிலும் ஒவ்வொரு விதமாக வசூல் செய்யப்படுகின்றது. எனவே, அனைத்து சுங்க வரி சாவடிகளிலும் ஒரே மாதிரியான கட்டண வசூல் செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications