மனைவியை கொன்ற ஆஸ்திரேலியா வாழ் இந்தியருக்கு 17 ஆண்டுகள் சிறை
மெல்போர்ன்: மனைவியைக் கொலை செய்த இந்தியருக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது ஆஸ்திரேலிய கோர்ட்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர் சுக்மந்தர் சிங்குக்கும் அவரது மனைவி மகிந்தர் கவுருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சண்டை போடாத நாளே இல்லை.
குடிப்பழக்கம் உள்ள சுக்மந்தர் சிங் தினமும் குடி போதையில் மனைவியை அடிப்பது வழக்கமாகி விட்டது. இந்த கொடுமையை சகிக்க முடியாத மூத்த மகள் சரப்ஜித் கவுர் (21) ஆஸ்திரேலியாவுக்கு படிக்க சென்றுவிட்டார்.
தன் தந்தையிடம் இருந்து தாயை காப்பாற்ற அவரை கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு வரவழைத்தார். இதையடுத்து, தன்னையும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துக் கொள்ளும்படி சுக்மந்தர் சிங் மகளை தொல்லை செய்ய ஆரம்பித்தார். இதையடுத்து தந்தையிடம் சில உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டு சரப்ஜித் கவுர் அவரையும் அழைத்துக் கொண்டார்.
ஆஸ்திரேலியா சென்ற பிறகு சிறிது காலம் ஒழுங்காக இருந்த அவர், பின்னர் பழையபடி மாறிவிட்டார். தினமும் குடிப்பதோடு மட்டுமல்லாமல் போதைப் பொருட்களும் எடுத்துக்கொண்டு மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி மனைவியை மரக்கட்டையால் அடித்துள்ளார் சுக்மந்தர் சிங். இதில் மகிந்தர் கவுர் பலியானார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுக்மந்தர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications