மர உச்சியிலிருந்து வீரர்களை கண்காணித்து தாக்கினர் நக்சலைட்கள்-சிஆர்பிஎப் வீரர்
ராய்ப்பூர்: மரங்களின் உச்சியிலிருந்து சிஆர்பிஎப் வீரர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அதிரடித் தாக்குதல்களை நக்சலைட்கள் நடத்துவதாக நக்சலைட் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்த வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டிஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நக்சலைட்கள் நடத்திய அதிரடித்தாக்குதலில் 27 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர்.
தாக்குதலில் காயமடைந்து உயிர் தப்பிய வீரர் பரமானந்த் தனியார் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...
நக்சலைட்கள் மரங்களின் மீது அமர்ந்திருந்தனர். நாங்கள் அந்தப் பகுதிக்குள் வந்ததுமே துப்பாக்கிகளால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். எங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு நேரம் கொடுக்காமல் சுட ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட 2 முதல் 3 மணி நேரம் வரை துப்பாக்கிச் சூடு நடந்தது. இரு தரப்பிலிருந்தும் கடுமையாக சுட்டனர். எங்களுக்கு அதிக சேதம் நடந்ததாக நான் கூற முடியாது.நான் இருந்த பகுதியிலிருந்து சம்பவம் நடந்த இடம் சற்று தொலைவில் இருந்தது.
நாங்கள் சென்ற பகுதியில் நக்சலைட்கள் பதுங்கியிருந்தது குறித்து எங்களுக்குத் தெரியாது. ஆனால் மரங்களின் உசத்சியில் இருந்தபடி எங்களை அவர்கள் கண்காணித்து வந்தது பின்னர்தான் தெரிய வந்தது.
எங்களைத் தாக்கிய நக்சலைட் குழுவில் 200 பேர் வரை இருந்ததாக கருதுகிறோம். முழு அளவில் தயார் நிலையில்அவர்கள் இருந்தனர். எனவே எங்களைப் பற்றி முன்கூட்டியே அவர்களுக்கு துப்பு கிடைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார் பரமானந்த்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications