'பாரத் பந்த்': பாஜக, இடதுசாரிகள் ஆளும் 11 மாநிலங்கள் ஸ்தம்பிப்பு- கட்காரி, அருண் ஜேட்லி, நாயுடு கைது
டெல்லி: பாஜக ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளத்திலும் உள்ளிட்ட 11 மாநிலங்களில் பாரத் பந்த் முழு அளவில் நடந்தது.
பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வைக் கண்டித்து பாஜக, இடதுசாரிகள் பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்தன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பாஜக, சிவசேனா, சமாஜ்வாடிக் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக், ஆர்எஸ்பி, அதிமுக, மதிமுக, தெலுங்கு தேசம், பிஜூ ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், அஸ்ஸாம் கன பரிஷத், அகாலிதளம், இந்திய தேசியலோக்தளம் உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன.
இடதுசாரி கட்சிகளும், பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் அந்த கூட்டணியில் இடம் பெறாத சில எதிர்க்கட்சிகளும் இணைந்து முழு அடைப்பு போராட்டம் (பாரத் பந்த்) நடத்தியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் சில கட்சிகள் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
காலை 6 மணிக்கு இந்த பந்த் தொடங்கியது. பால், குடிதண்ணீர், மருத்துவமனை சேவை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு முழு அடைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
கேரளா-மேற்கு வங்கம் ஸ்தம்பிப்பு:
கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் பந்த் முழு அளவில் நடந்தது. பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. தெருக்கள், சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. கல்வி நிலையங்களும் பெருமளவில் மூடப்பட்டிருந்தன.
ரயில்கள் பலத்த பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. பல ரயில் நிலையங்களில் மறியல் போராட்டங்கள் நடந்தன.
குஜராத் வெறிச்சோடியது:
இதேபோல பாஜக ஆளும் மாநிலங்களிலும் பந்த் வெற்றிகரமாக நடந்தது.
குஜராத் முழுவதும் முழுமையான அளவில் பந்த் இருந்தது. அங்கு பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் என எதுவும் ஓடவில்லை. வர்த்தக நிறுவனங்கள் இயங்கவில்லை. கடைகள் அடைக்கப்பட்டு மாநிலமே வெறிச்சோடியது.
அதே போல பாஜக ஆளும் கர்நாடகம், சட்டீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், ஆகிய மாநிலங்களில் முழு அடைப்பு தீவிரமாக இருந்தது.
அதேபோல பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கும் பிகார் மாநிலத்திலும் பந்த் கிட்டத்தட்ட முழு அளவில் நடந்தது.
டெல்லியில் பதட்டம்:
காங்கிரஸ் ஆளும் டெல்லியில் பல இடங்களில் இடதுசாரிகளும், பாஜகவும் மறியல் போராட்டம் நடத்தியதால் பஸ்கள் ஓடினாலும், போக்குவர்தது பாதிக்கப்பட்டது.
மும்பையில் பஸ்கள், ரயில்கள் வழக்கம் போல ஓடின. இருப்பினும் ஆட்டோக்கள் பெருமளவில் ஓடவில்லை. பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இயல்பு நிலை பெருமளவில் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன.
ஆந்திராவில் பஸ்கள் நிறுத்தம்:
ஆந்திராவில் வன்முறையாளர்களுக்கு அஞ்சி அரசு பஸ்கள் பெருமளவில் ஓடவில்லை. தெலுங்கானாவில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கட்காரி, அருண் ஜேட்லி, நாயுடு கைது:
நாட்டின் பல்வேறு நகர்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் நிதின் கட்காரி, அருண் ஜெட்லி, முக்தர் அப்பாஸ் நக்வி, ராஜ்நாத் சிங், கோபிநாத் முன்டே, ஹைதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளத் தவைவர் சரத் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன்












Click it and Unblock the Notifications