கொழும்புக்கு கூடுதல் விமானம்: ஜெட் ஏர்வேஸுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்குமா?
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கூடுதல் விமானங்களை இயக்க தீர்மானித்துள்ளது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
ஜெட் ஏர்வேஸின் ஒரு விமானம் மட்டும் தான் தற்போது சென்னையில் இருந்து கொழும்புக்கு தினசரி சென்று வருகிறது.
இந்நிலையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்தும் கொழும்புக்கு கூடுதல் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசின் அனுமதி கேட்டு காத்துக்கொண்டிருக்கிறது.
இலங்கை தலைநகர் கொழும்புக்கு கூடுதல் விமானங்களை இயக்க மத்திய அரசிடம் 4 மாதங்களுக்கு முன்பே அனுமதி கேட்டு விண்ணப்பித்தும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications