சிறைவாயிலில் பெண் கைதி சேலையை கழற்றி போராட்டம்-சேலத்தில் பரபரப்பு
சேலம்: போலீசார் தன் தாய் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி சேலம் பெண்கள் கிளை சிறை வாசலில் ஒரு பெண் கைதி சேலையை கழற்றி வீசி போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறைச்சாலையில் சேலம் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் மைதிலி அடைக்கப்பட்டு உள்ளார். மைதிலி, மேகலா, சியாமளா ஆகிய மூவரும் நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் திருட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 3 பேரையும் நேற்று காலை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட பெண் போலீசார் அவர்களை சிறைச்சாலைக்கு வெளியில் அழைத்து வந்தனர். அப்போது மைதிலி திடீரென தான் உடுத்தியிருந்த சேலையை கழற்றி விட்டு, பாவாடை ஜாக்கெட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு போதை பாக்கு மற்றும் மூக்குபொடி பொட்டலங்களை பெண்கள் கிளை சிறைச்சாலைக்குள் வீசியதற்காக மைதிலியின் தாய் சாந்தி கைது செய்யப்பட்டார்.
தன் தாய் மீது போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாகக் கூறி மைதிலி இவ்வாறு போராட்டம் நடத்தினார்.
இது குறித்து தகவல் அறிந்த பெண்கள் கிளை சிறைக்காவலர்கள் மைதிலியை வலுக்கட்டாயமாக சிறைக்குள் அழைத்துச் சென்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications