போலீசாரை கண்டித்து மதுரை வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை வக்கீல்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வக்கீல்கள் அசோக் மற்றும் அக்பர் அலி ஆகியோர் மீது போலீசார் பொய் வழக்குகள் போட்டுள்ளதை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் வக்கீல்கள் ஈடுபட்டனர்.
மேலும், பொய் வழக்குகளை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மற்ற வக்கீல்களும் நீதிமன்ற பணிகளை புறக்கணித்துவிட்டு, உயர் நீதிமன்ற கிளை அருகில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பாதுகாப்பு கருதி, அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications