கோவை குண்டுவெடிப்புக் கைதி அன்சாரி புழல் சிறைக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அல் உம்மா இயக்கச் செயலாளறும், அதன் தலைவர் பாட்ஷாவின் மகனுமான முகம்மது அன்சாரி கோவையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பில் கைதாகி தண்டனை அனுபவித்து வருபவர் அன்சாரி. பாட்ஷா, அன்சாரி உள்ளிட்டோர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அன்சாரி உள்ளிட்ட 2 கைதிகள் மட்டும் திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நிர்வாக காரணங்களுக்காக இருவரும் கோவையிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications