மீனவர் படுகொலை: இலங்கை தூதரகம் முன் கூடி திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: நாகை மீனவர் செல்லப்பன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக மீனவர் அணி சார்பில் இன்று சென்னையில் இலங்கைத் துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாகை மாவட்ட மீனவர் செல்லப்பன் என்பவரை இலங்கை கடற்படை காடையர்கள் ஈவு இரக்கமின்றி அடித்தே கொன்றனர். இந்த செயல் தமிழக மீனவர்களிடையே மட்டுமல்லாமல் தமிழக மக்களிடமும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடல் தாண்டி தமிழகத்தின் மீதும் இலங்கை போர் தொடுத்து வருவதாக மக்கள் கருதுகின்றனர். இதை தட்டிக் கேட்காமல் சால்ஜாப்பாக பேசி வருகிறது மத்திய அரசு.
இலங்கையின் செயலைக் கண்டித்து அறிக்கை விட்ட முதல்வர் கருணாநிதி, பிரதமர், மத்திய பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். மேலும் திமுக மீனவர் அணியும், இலங்கைத் துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அறிவித்தது.
அதன்படி இன்று காலை மீனவர் அணிச்செயலாளர் பெர்னார்ட் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு இந்த செயலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கையின் செயலைக் கண்டித்தும் கோஷம் போட்டுவிட்டு கலைந்து சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications