பார்ட்டி கொடுத்தபோது தகராறு-நண்பரைக் கொன்று விட்டு படுத்துத் தூங்கியவர் கைது
சென்னை: நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட இரு நண்பர்கள் மது அருந்தி கொண்டாடினர். அதில் மோதல் ஏற்பட்டு ஒருவர் இன்னொருவரை அடித்துக்கொலை செய்து விட்டார். கொலை செய்து விட்டு போதையில் பிணத்துக்கு அருகே படுத்துத் தூங்கியவரை இன்றுகாலை போலீஸார் தட்டி எழுப்பிக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது நண்பர் பழனி. இவரும் நெருங்கிய நண்பர்களாம். நீண்ட நாட்களாக இருவரும் சந்திக்கவே இல்லை. இந்த நிலையில் நேற்று இருவரும் சந்தித்துள்ளனர். நீண்ட நாட்களாயிற்றே சந்தித்து நண்பா என்று பாச மழை பொழிந்துள்ளனர். பின்னர் மது வாங்கிக் கொண்டு போய் உட்கார்ந்து ஜாலியாக சாப்பிட்டுள்ளனர்.
அப்போது ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து பழனி தலை மீது ஓங்கி அடித்துள்ளார் பாபு. இதில் பழனி மயங்கி கீழே விழுந்து சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டார்.
அவர் அடித்ததில் மயங்கி விழுந்து விட்டதாக கருதிய பாபு, அவரை எழுப்பிப் பார்த்தார். ஆனால் பழனி எழுந்திருக்கவில்லை. இதையடுத்து காலையில் எழுப்பிக் கொள்ளலாம் என்று கருதி பழனியின் பிணத்திற்கு அருகிலேயே படுத்துக் கொண்டார் பாபு.
தலையில் ரத்தக் காயத்துடன் ஒருவர் பிணமாகக் கிடப்பதையும், அவருக்கு அருகில் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் விரைந்து வந்து பாபுவை எழுப்பினர். நடந்தது என்ன என்று அவரிடம் கேட்டபோதுதான் பழனி இறந்து போனது பாபுவுக்குத் தெரிய வந்தது. போதை இனனும் தெளியாமல் இருந்த பாபு, நண்பனைக் கொன்று விட்டேனே என்னையும் உடனே தூக்கில் போடுங்கள் என்று கீழே உருண்டு புரண்டு அழுதார்.
அவரை போலீஸார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications