இந்திய-இலங்கை உறவு கோடீஸ்வரர்களுக்கு மட்டும்தானா? விஜயகாந்த் கேள்வி

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலோர மீனவர்களைப் பொறுத்தவரையில் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது என்பது அவர்களது வாழ்வுரிமையாகும். மத்திய, மாநில அரசுகள் வாழ்வதற்கு வழி செய்யாமல், ஏற்கனவே இருந்த வாழ்வுரிமைகளையும் பறிக்க அனுமதிப்பது நியாயமா?. 29.9.2009 அன்று டெல்லியில் தே.மு.தி.க. சார்பில் இந்த வாழ்வுரிமையை வற்புறுத்தி தமிழக கடலோர மீனவர்கள் பிரதிநிதிகளுடன், தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதம் இருந்தேன்.
தமிழக-இலங்கை கடல் பகுதியில் இரு தரப்பு மீனவர்களும் சுதந்திரமாக மீன் பிடிக்கும் உரிமையை, 1974-ம் ஆண்டுக்கு முன்பிருந்ததைப் போல, மீண்டும் பெற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய பிரதமருக்கு கடிதமும் கொடுத்தேன்.
15.10.2009 அன்று இந்திய பிரதமர் எனக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்கு செல்வதால்தான் இத்தகைய நிலைமை ஏற்படுகிறது என்றும், இருப்பினும் அவர்கள் சாதாரண அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமே தவிர, தாக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் தமிழக மீனவர்கள் மீது தாக்கப்படுவது நின்றபாடில்லை.
இன்று இந்திய-இலங்கை உறவு என்றுமில்லாத அளவு மேம்பட்டு உள்ளது என்று இரு தரப்பாலும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஐ.நா. மனித உரிமை கமிஷன் முன்பு 2 முறை இலங்கை அரசு தமிழினப் படுகொலை சம்பந்தமாக குற்றவாளியாக நிறுத்தப்பட்டபொழுது, இந்திய அரசுதான் தலையிட்டுக் காப்பாற்றியது. சர்வதேச நிதி உதவி நிறுவனம் (ஐ.எம்.எப்.) இலங்கை அரசுக்கு பண உதவி செய்ய மறுத்தபொழுது, இந்திய அரசின் உத்தரவாதத்தின் பேரில்தான் இலங்கைக்கு நிதி உதவி கிடைத்தது.
இப்பொழுதும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே போர்க் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ஐ.நா. மன்றம் அமைத்துள்ள நிபுணர் குழுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய அரசு ஐ.நா.வை வற்புறுத்துவதாக அறிகிறேன். இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் இந்திய அரசு பெருமளவுக்கு உதவி புரிந்து வருகிறது.
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே, தனது பேட்டியில் இந்தியா உறவு நாடு என்றும், இதர நாடுகள் நட்பு நாடுகள் என்றும் கூறினார். மேலும் உறவு என்றும் நிலைக்கக் கூடியது என்றும், ஆனால் நட்பு வந்துபோகக் கூடியது என்றும், ஆகவே இந்தியாவோடு கொண்டுள்ள உறவைப் பற்றிக் கூறியுள்ளார்.
இலங்கையில் மூலதனம் போடும் முக்கிய ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய கோடீஸ்வர நிறுவனங்கள் இலங்கையில் முதல் போட்டு பெருமளவிற்கு லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால் தினந்தோறும் கடலில் மீன் பிடித்து உயிர் வாழ வேண்டிய மீனவர்களுக்கு வாழ்க்கையே பிரச்சினை ஆகி விட்டது.
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசிவதைப் போல, இந்திய - இலங்கையின் இன்றைய உறவு, கோடீஸ்வர கம்பெனிகளுக்கு மட்டும்தான் பயன்பட வேண்டுமா? ஏழை, எளிய மீனவர்களின் உரிமையை மட்டுமல்ல, உயிரையும் பறிக்க வேண்டுமா? இலங்கை சம்பந்தமான இந்திய அரசின் இத்தகைய பிற்போக்குத் தனத்தைக் கண்டித்து தே.மு.தி.க. சார்பில் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணியளவில் தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications