ஆலங்குளத்தில் போட்டியிட முடிவு-தங்க வீடு தேடும் சரத்குமார்
ஆலங்குளம்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வருகிற சட்டசபைத் தேர்தலில் ஆலங்குளத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார். இதனால் அங்கு தங்கி பிரசாரத்தைக் கவனிக்க வசதியாக ஒரு வீடு தேடி வருகிறார்.
கடந்த லோக்சபா தேர்தலி்ன்போது ஆலங்குளத்திற்கு பிரசாரத்திற்கு வந்த சரத்குமார் வரு்ம் சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட போவதாக தெரிவித்தார். இதற்காக ஆலங்குளத்திலேயே வீடு எடுத்து தங்க போவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், கடந்த 10 நாட்களாக சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலங்குளத்தில் சரத்குமார் தங்குவதற்கு தீவிரமாக வீடு தேடி வருகின்றனர்.
இது குறித்து சரத் தரப்பு பிரமுகர் ஒருவர் கூறுகையில்,
வரும் சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட போவதாக சரத்குமார் முன்னரே தெரிவித்துள்ளார். தற்போது ஆலங்குளத்தில் தங்குவதற்காக வீடு தேர்வு செய்யும்படி கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து மாநில அமைப்பு செயலாளர் காளிதாஸ், தென்மண்டல் அமைப்பு செயலாளர் சுந்தர், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் ராபர்ட் ஆகியோர் தீவிரமாக வீடு தேடி வருகின்றனர். போக்குவரத்தி்ற்கு எளிதாகவும், வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாகவும் உள்ள வீடு ஒன்றை தேர்வு செய்யும்படி சரத்குமார் கூறியுள்ளார் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications