தேர்தல் பணியாற்ற 25 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்குத் தடையா?-துரைமுருகன் கண்டனம்
சென்னை: தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட தடைவிதித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டது கண்டனத்துக்குரியது. அப்படி எதுவும் விதிக்கப்படவில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாலைப் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி உண்மையானதன்று. யாரோ வேண்டுமென்றே, திட்டமிட்டு செய்யும் சூழ்ச்சி.
கடந்த 6-ம் தேதி மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் நவீன் சாவ்லாவும் மற்ற ஆணையர்களான எஸ்.ஒய்.குரேஷி, சம்பத் ஆகியோரும் தமிழகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மண்டல காவல் துறை தலைவர்கள், மாநகர காவல்துறை ஆணையர்கள் மற்றும் காவல் துறை தலைவர், தமிழக அரசின் உள்துறை செயலாளர் ஆகியோர்களை சந்தித்து வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அந்த சந்திப்பின் போதும், அதன் பிறகும் மாலை பத்திரிக்கையில் வந்துள்ள செய்தியைப் பற்றி யாரும் பேசவில்லை.
இது தான் உண்மை நிலவரம். ஆனால், மாலை இதழ் ஒன்று மட்டும் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கட்சிகள் நடத்தும் பத்திரிகைகளில் இது போன்ற பொய்யான செய்திகள் வரலாம். ஆனால், நடுநிலையோடு நடத்தப்படுவதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த நாளிதழ் இவ்வாறு தவறான செய்திகளை ஒரு சில நாட்களாக வெளியிட்டு வருவது சூரியனை உள்ளங்கையால் மறைக்க முயற்சி செய்வது போலாகும். இந்த முயற்சி வீனாகத் தான் போகும், ஒரு போதும் பலிக்காது என்று அவர் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications