திமுக அரசுக்குப் பாராட்டு விழா-சிபிஎம்மிலிருந்து கோவிந்தசாமி எம்.எல்.ஏ நீக்கம்
சென்னை: திமுக அரசுக்குப் பாராட்டு விழா நடத்தப் போவதாக கூறியிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற முன்னாள் தலைவர் கோவிந்தசாமி கட்சியை விட்டு இன்று அதிரடியாக நீக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத் திட்டங்கள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றுள்ளது. இதனால் இதற்கு காரணமான தமிழக அரசுக்கு ஆகஸ்ட் 1ம்தேதி பாராட்டு விழா நடத்தப் போகிறேன். அதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று கூறியிருந்தார் கோவிந்தசாமி.
இதையடுத்து பாராட்டு விழா நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு கோவிந்தசாமிக்கு அறிக்கை அனுப்பியிருந்தது.
ஆனால், அறிக்கைக்கு கோவிந்தசாமி உரிய பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கோவிந்தசாமி எம்எல்ஏ நீக்கப்படுவதாக அக் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
கடந்த ஒருவருடத்திற்கு முன்பு, திருப்பூர் தொழிலதிபர்களுடன் கோவிந்தசாமி முதல்வர் கருணாநிதியை சந்தித்தை அடுத்து, அக் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
கோவிந்தசாமியின் நீக்கத்தைத் தொடர்ந்து சட்டசபையில் சிபிஎம்மின் பலம் 9லிருந்து 8 ஆக குறைந்துள்ளது.
இதுவரை அதிமுகவை மட்டுமே பாதித்து வந்த 'திமுக ஆதரவு வைரஸ்' தற்போது சிபிஎம்மையும் பாதிக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications