கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பேங்க் சுப்பிரமணியனை நீக்க கோரிக்கை
கரூர்: கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரணியனை அந்த பதவியில் இருந்து நீக்க சேவாதள நிர்வாகிகள் சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கரூர் மாவட்ட சேவாதள மாவட்ட தலைமை அமைப்பாளர் ராஜேஷ் கூறியதாவது:
கரூர் மாவட்ட காங்கிரஸ் சேவாதள புதிய தலைமை அமைப்பாளராக செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.
அகில இந்திய சேவாதள தலைவரின் ஒப்புதல் பெற்றே, மாவட்ட தலைவரை, மாநில தலைவர் நியமிக்க வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் சேவாதள தலைவர் மகேந்திர ஜோஷி, கரூர் மாவட்ட சேவாதள தலைமை அமைப்பாளரான என்னை மாற்ற ஒப்புதல் அளிக்கவில்லை.
மேலும், இது குறித்து குறித்து மாநில சேவாதள பொறுப்பாளர் மக்னாய்க்கிடம் பேசவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், பேங்க் சுப்பிரமணியம், மாவட்ட சேவாதளத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில், கட்சியினர் மத்தியில் பொது மக்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் தவறான தகவலை கொடுத்துள்ளார்.
எனவே, கட்சி நலன் கருதி கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரமணியனை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
இதே கருத்தை முன்வைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் இந்த புகாரை சேவாதள நிர்வாகிகள் அனுப்பியுள்ளனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications