தண்டவாளத்தில் விரிசல்-பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது
அரியலூர்: அரியலூர் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை கிராமவாசி ஒருவர் உரிய நேரத்தில் கண்டுபிடித்து சிவப்புத் துணியைக் காட்டி பல்லவன் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி பல்லவன் எக்ஸ்பிரஸ் இன்று காலை கிளம்பியது. இந்த ரயில் சென்னை வந்து பிறகு வைகை எக்ஸ்பிரஸாக மதுரைக்குக் கிளம்ப வேண்டும்.
ரயில் அரியலூர் அருகே சில்லக்குடி என்ற கிராமத்தில் வந்தபோது தண்டவாளத்தில் வித்தியாசமான சத்தம் வருவதை கேட்ட அப்பகுதியில் இருந்த கிராமவாசி ஒருவர் சிவப்புத் துணியைக் காட்டி பல்லவன் எக்ஸ்பிரஸை நிறுத்தினார்.
வித்தியாசமான சத்தம் வந்த இடத்திற்கு 100 மீட்டருக்கு முன்பே ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர்.அவர்கள் வந்து பார்த்தபோது தண்டவாளத்தையும், சிமென்ட் சிலாப்பையும் இணைக்கும் பகுதியில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதன் காரணமாகவே வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இந்த விரிசலைப் பார்க்காமல் பல ரயில்கள் வந்து போனதால் விரிசல் அதிகமாகி சத்தம் அதிகமாகியுள்ளது. ஒருவேளை பல்லவன் எக்ஸ்பிரஸ் இதன் மீது போயிருந்தால் நிச்சயம் விபரீதம் ஏற்பட்டிருக்கும் என ரயில்வே ஊழியர்கள் கூறினர்.
விரிசல் தற்காலிகமாக சரி செய்யப்பட்ட பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக பல்லவன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது. இதன் காரணமாக சென்னையிலிருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் தாமதமாக கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிசல் தற்காலிகமாகவே சரிசெய்யப்பட்டிருப்பதால் சில்லக்குடி பகுதியில் ரயில்கள் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications