கும்பகோணம் பள்ளி தீ விபத்து 6 ம் ஆண்டு நினைவு தினம்-மக்கள் மலரஞ்சலி

கும்பகோணத்தில் கடந்த 2004 ம் ஆண்டு ஜூலை 16 ம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா என்ற தனியார் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக கருகி பலியானார்கள். மேலும், 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர சம்பவத்தை கண்டு தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
பள்ளி குழந்தைகள் தீ விபத்தில் பலியான சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை 6.30 மணிக்கு கும்பகோணம் காசிராமன் தெருவில் தீ விபத்துக்குள்ளான பள்ளி முன்பு இறந்து போன குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.
பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமகவினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல இதற்கென அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அமைச்சர் கோ.சி.மணி அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோரும், பொதுமக்களும், கும்பகோணம் தீவிபத்து நினைவுதினமான ஜூலை 16ம் தேதியை ஆண்டுதோறும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க கோரினர்.












Click it and Unblock the Notifications